புலிகள் பகுதியிலிருந்து 35,000 தமிழர்கள் மீட்பு: ராணுவம்

விடுதலைப் புலிகள் வசம் இருந்த ஒரு பகுதியை இன்று காலை ராணுவம் பிடித்ததாகவும், அந்தப் பகுதியில் சிக்கியிருந்த 35 ஆயிரம் அப்பாவிகள் மீட்கப்பட்டதாகவும் ராணுவத்தின் தகவல் தெரிவிக்கிறது.
புதுமத்தாளன் பகுதியில் உள்ள 3 கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதியே இன்று காலை மீட்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் அந்தப் பகுதியில் சிக்கியிருந்த தமிழர்கள் அரசுப் பகுதிக்கு வர முடிந்ததாகவும் அது கூறியுள்ளது.
ஒரே நாளில் இத்தனை பேர் மீட்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்றும் ராணுவம் கூறியுள்ளது.
விடுதலைப் புலிகள் வசம் உள்ள மீதமுள்ள பகுதிளை மீட்க முழு அளவிலான தாக்குதலில் இறங்க ராணுவம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
எனவே முடிந்தவரை எவ்வளவு தமிழர்களை மீட்க முடியுமோ, அவ்வளவு பேரை மீட்கும் முயற்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2 தற்கொலைப் படைத் தாக்குதல்கள் ..
இன்று காலை விடுதலைப் புலிகள் பகுதியிலிருந்து தமிழர்களை மீ்ட்கும் முயற்சியில் ராணுவம் ஈடுபட்டிருந்தபோது அங்கு விடுதலைப் புலிகள் 2 தற்கொலைப் படைத் தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதில் 17 பேர் உயிரிழந்ததாகவும் ராணுவம் கூறுகிறது.
வீடியோ படம் பார்த்த ராஜபக்சே..
இதற்கிடையே தமிழர்கள் பெருமளவில் தப்பி வருவதை வீடியோவில் படமாக்கியுள்ளது இலங்கை ராணுவம். இந்தப் படங்களைப் பார்க்க அதிபர் ராஜபக்சே ராணுவத் தலைமையகத்திற்குச் சென்று அங்கு வீடியோ படங்களைப் பார்வையிட்டார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications