சந்திரபாபு-சிரஞ்சீவி கூட்டணி வரும்- சிபிஎம்
ஹைதராபாத்: ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சிக்கு அரசு அமைக்க போதிய இடங்கள் கிடைக்கவில்லை என்றால் பிரஜ்ஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவர் சிரஞ்சீவியுடன் இணைந்து ஆட்சியமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்துக்கு என இரண்டு தேர்தல்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துவிட்டது. மே 16ம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கையை எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர்.
இந் நிலையில் ஆந்திர மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் நாராயணா நிருபர்களிடம் கூறுகையில்,
காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிரஜா ராஜ்ஜியம் என ஆந்திராவில் மும்முனை போட்டி நிலவுகிறது. தற்போது எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது. ஒரு வேளை எந்த கட்சிக்கும் அரசு அமைக்க தேவையான சீட்கள் கிடைக்காத பட்சத்தில் சந்திரபாபு நாயுடு, சிரஞ்சீவி கூட்டணி ஆட்சிக்கு முயற்சி செய்வோம்.
இரு தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி எப்படியாவது கூட்டணி ஆட்சி ஏற்படுத்துவோம். இல்லையென்றால் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, சிரஞ்சீவியிடம் ஆதரவு பெற்று மீண்டும் ஆட்சி அமைத்து விடுவார். ஆந்திராவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதுதான் எங்கள் லட்சியம்.
சிரஞ்சீவி முதல்வர்...
அதற்காக நாங்கள் எந்தவித தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம். பிரஜ்ஜா ராஜ்ஜியம் கட்சி அதிக இடங்களில் வென்றால் சிரஞ்சீவியை முதல்வராக்கவும் தயங்க மாட்டோம். இரண்டு கட்சிகளும் சமமான இடங்களை பெற்றால் இரண்டு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டு ஆட்சியை பகிர்ந்து கொள்ளும் வகையில் முயற்சிகள் நடக்கும்.
காங்கிரஸ் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்தால் சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்திய அரசியல்வாதிகளின் கறுப்பு பணம் ரூ. 72 லட்சம் கோடியில் இருந்து ரூ. 100 லட்சம் கோடியாக கூடிவிடும்.
மத்தியில் மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்பு பணம் முழுவதும் உடனடியாக மீட்கப்பட்டு மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவிடப்படும் என்றார் அவர்.
-
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications