ஈழம்: ஜெயலலிதா என்ன தியாகம் செய்தார்?-அன்பழகன்

Subscribe to Oneindia Tamil

பண்ருட்டி: இலங்கை பிரச்சினையில் கருணாநிதி கபட நாடகம் ஆடுவதாக குற்றம்சாட்டி வரும் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொது செயலாளர் வைகோ ஆகியோர் ஈழத் தமிழர்களுக்காக என்ன தியாகம் செய்தார்கள் என நிதி அமைச்சர் அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடலூரில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ். அழகிரியை ஆதரித்து அன்பழகன் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

இலங்கை தமிழர் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதி பல்வேறு நல்ல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உண்ணாவிரதம் இருந்ததன் மூலம் அவர் எப்போதும் தமிழர்களை காப்பாற்றுவார் என்பதை நிரூபித்து உள்ளார்.

இலங்கை பிரச்சினையில் கருணாநிதி கபட நாடகம் ஆடுவதாக குற்றம்சாட்டி வரும் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொது செயலாளர் வைகோ ஆகியோர் குற்றம்சாட்டி வருகின்றனர். இலங்கை தமிழர்களுக்காக அவர்கள் என்ன தியாகம் செய்தார்கள் என சொல்ல முடியும்.

மதிமுக தற்போது தேய்ந்து வருகிறது. ராமதாஸ் மக்கள் மீது அக்கறை இல்லாதவர். கடந்த 2005ல் ராமதாஸ், ஜெயலலிதா எதிர்ககட்சிகளை மதிக்கத் தெரியாதவர் என கூறினார். தற்போது ஜெயலலிதாவால் நல்லாட்சி தர முடியும் என்கிறார். இவர்களது கூட்டணிக்கு ஆட்சிக்கு வந்தால் நாடு என்னவாகும்.

மக்களுக்கு அதிக நன்மைகளையும், சலுகைகளையும் வழங்கியவர் கருணாநிதி தான். அதிமுக கூட்டணி பித்தலாட்ட கூட்டணியாக திகழ்ந்து வருகிறது. எனவே வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்து அவர்களை 40 தொகுதியிலும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார் அன்பழகன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+