பிகாரில் தேர்தல் முடிந்ததும் நிதிஷ் அடித்த 'பல்டி'!
லூதியானா: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் கூட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என கூறிய ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும் பிகார் முதல்வருமான நிதிஷ் குமார், நேற்று மோடியுடன் ஒரே கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பிகாரில் தேர்தல் முடியும் வரை மோடியுடன் கூட்டத்தி்ல் பங்கேற்க மாட்டேன் என்று கூறியவர் அங்கு வாக்குப் பதிவு முடிந்த பின் பல்டி அடித்துவிட்டார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த பாஜக கூட்டணி கட்சிகளின் பிரசாரக் கூட்டத்தில் பாஜக பிரதம வேட்பாளர் அத்வானி, மோடி, நிதிஷ், அணி மாறி வந்த தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, அகாலிதளம் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்துக்கு வரும் முன் பாட்னாவில் நிருபர்களிடம் பேசிய நிதிஷ்,
இடதுசாரி கட்சிகளோ, காங்கிரசோ என்னிடம் கூட்டணி குறித்துப் பேசவில்லை. நான் பாஜக கூட்டணியில் தான் இருக்கிறேன். இந்த கூட்டணி நிச்சயம் ஆட்சியை பிடிக்கும். தெலுங்கானா கட்சி பாஜக கூட்டணிக்கு வந்திருப்பதால் பாஜக கூட்டணியின் பலம் கூடியுள்ளது. மத்தியில் மற்றவர்களின் ஆதரவில்லாமல் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார்.
ராகுல் ஏமாந்து விட்டார்-லாலு:
இது குறித்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும் ரயில்வே அமைச்சருமான லாலு நிருபர்களிடம் கூறியதாவது:
நிதிஷ் குமார் மதசார்பற்றவர் என்பது போல ராகுல் காந்தியும் மற்றும் சில காங்கிரசாரும் பேசி வந்தனர். ராகுலை ஒருபடி மேலேயே போய் நிதிஷை பாராட்டினார்.
இப்போது நிதிஷ்குமாரின் சாயம் இப்போது வெளுத்து விட்டது.
டெல்லியில் நடந்த பாஜக கூட்டணிக் கூட்டத்தில் நரேந்திர மோடி பங்கேற்கிறார் என்பதால் அப்போது நிதிஷ்குமார் அந்த கூட்டத்துக்கு செல்லவில்லை. இப்போது பிகாரில் அனைத்து கட்ட தேர்தலும் முடிந்து விட்டதால் மோடி பங்கேற்ற கூட்டத்தில் இவரும் கலந்து கொண்டுள்ளார்.
ராகுல் காந்தி நிதிஷ்குமாரை நம்பி ஏமாந்து விட்டார். ராகுல் காந்தி, நிதிஷ்குமாருக்கு கொடுத்த மதசார்பற்றவர் சான்றிதழுக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது என்றார்.
பாஸ்வானும் கண்டனம்...
லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறுகையில்,
பிகாரில் தேர்தலுக்கு முன் வரை மோடி பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று நிதிஷ் கூறிவந்தார். பிகாரில் தேர்தல் முடிந்தவுடன் தனது சுயரூபத்தை காட்டிவிட்டார். இதன் மூலம் நிதீஷ் குமார் எத்தகைய மதச்சார்பின்மை உடையவர் என்பதை பிகார் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வரும் காலத்தில் அவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றார்.
இதற்கிடையே நிதிஷ்குமாருடன் தாங்கள் பேச்சு நடத்தி வருவதாகவும் அவரும் மூன்றாவது அணிக்கு வருவார் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சாரியா கூறியுள்ளார்.
-
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக்












Click it and Unblock the Notifications