அம்மாவுக்கு பிரசாரம் செய்ய வருணுக்கு தடை
அனோலா: வருண் காந்தியின் தாயார் மேனகா காந்தி போட்டியிடும் அனோலா தொகுதியில் பிரசாரம் செய்ய வருணுக்கு உத்தர பிரதேச அரசு திடீர் தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து வருண் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் பாஜகவின் பிலிபத் தொகுதி வேட்பாளரும், இளம் தலைவருமான வருண் காந்தி, முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயந்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஒரு வழியாக அவர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்ப்டடது.
இந்நிலையில் தனது தந்தை சஞ்சய் காந்தியின் சர்ச்சைக்குரிய கருத்தான அனைவருக்கும் கட்டாய குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கூறி அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் வருண் காந்தியின் பேச்சு அனோலா தொகுதியில் பிரச்சினையை ஏற்படுத்தும் என்றும், அங்குள்ள ஒரு பிரிவை சேர்ந்த மக்கள் அவர் மீது கோபாமாக இருக்கிறார்கள் எனவும் உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் இப்பகுதியில் கலவரம் வேறு நடந்துள்ளது.
இந்த அனைத்தும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, வருணுக்கு கடந்த ஐந்து நாட்களுக்கு முன் அனோலா தொகுதியில் பிரசாரம் செய்ய கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் அனோலாவில் நடக்கும் பேரணியில் பங்கேற்க கூடாது என் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து உத்தர பிரேதச அரசு வேண்டுமென்றே தனது பிரசாரத்தை தடுப்பதாக வருண் காந்தி தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளார். அதில், உத்தர பிரதேச அரசு தவறான அறிக்கையை வைத்து கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளது. வேண்டுமென்றே கூட்டணிக்கான அனுமதியை ரத்து செய்துவிட்டனர். அதை நீக்க வேண்டும் என்றார்.
இது குறித்து மேனகா காந்தி கூறுகையில்,
தங்களது கருத்தை தெரிவிக்க ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், இந்த உரிமை வருண் காந்திக்கு மறுக்கப்பட்டுள்ளது. அதை பறித்துவிட்டார்கள். வருண் இங்கு நடக்கிவிருந்த கூட்டத்தில் இந்து, முஸ்லிம் மக்களை ஒருங்கிணைக்க திட்டமிட்டிருந்தார் என்றார் மேனகா காந்தி.












Click it and Unblock the Notifications