புதுவையில் மாணவன் பாலா முதலிடம்!
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியில் பிளஸ் டூ தேர்வில் பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி மாணவன் பாலா 1,183 மதிப்பெண் பெற்று அந்த மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் அரசு மற்றும் தனியார் பள்ளியைச் சேர்ந்த 10,889 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 8,873 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி மாணவன் பாலா 1,183 மதிப்பெண் பெற்று புதுச்சேரி மாநிலத்தின் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
குளினீ பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நிஷா 1,180 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடத்தை பெற்றார். மாணவி திவ்ய பாரதி 1,179 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடத்தை பெற்றுள்ளனர்.
வழக்கம்போல் இந்த ஆண்டும் அந்த மாநிலத்தில் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications