ஆட்சியமைப்பு-நாளை டெல்லி செல்லும் கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புதிய அரசு அமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் முதல்வர் கருணாநிதி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். இதற்காக நாளை அவர் டெல்லி செல்கிறார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், கடந்த முறையை விட இந்த முறை கூடுதல் தொகுதிகளையும் பெற்று அசத்தியுள்ளது. பெரும்பான்மை பலத்துக்கு அக்கட்சிக்கு 12 தொகுதிகள் மட்டுமே தேவையான நிலை.

இந்த நிலையில் அரசமைப்பு குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளார். இதற்காக சோனியாவுடன் பேசுவதற்காக முதல்வர் கருணாநிதி நாளை டெல்லி செல்கிறார்.

இந்த சந்திப்பின்போது இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் திமுகவுக்கான அமைச்சர் பதவிகள் குறித்தும் அவர் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+