இருந்தாலும், இறந்தாலும் பிரபாகரன் போரை வழிநடத்துவார்-திருமா
சென்னை: தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் இருந்தாலும், மறைந்தாலும் தனி ஈழம் அமைக்க விடுதலைப்போரை தொடர்ந்து வழி நடத்துவார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விடுதலை இயக்கத்தின் தலைவர் தொல்.திருமாவளவன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த 6 மாத காலமாக தமிழக மக்களும் புலம் பெயர்ந்து வாழும் உலகத் தமிழர்களும் எவ்வளவோ மன்றாடிக்கேட்டும் கடுமையாகப் போராடியும் இந்தியாவோ, சர்வதேச சமூகமோ எமது ஈழத் தமிழ் சொந்தங்களை காப்பாற்ற முன்வரவில்லை என்பது எக்காலத்திலும் ஆற்றுப்படுத்த முடியாத வேதனையை அளிக்கிறது.
உச்சக்கட்டமாக எமது மக்களின் ஒரே பாதுகாவலர்களாக விளங்கிய தமிழீழ விடுதலைப்புலிகளையும் கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளனர். உலகத் தமிழினத்தை தலை நிமிரச் செய்த தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் படுகொலை செய்துவிட்டதாக சிங்கள இனவெறிக்கும்பல் கொழும்பு நகரில் கும்மாளமடித்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
பிரபாகரன் படுகொலையானாரா? அல்லது பாதுகாப்பாக உள்ளாரா? என்ற ஆராய்ச்சி ஒருபுறம் இருந்தாலும் ஈழத்தில் எமது மக்கள் கடந்த 2 நாட்களில் 50 ஆயிரத்துக்கும் மேல் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஈவிரக்கமற்ற இத்தகைய இனப்படுகொலையை உலகின் பார்வையிலிருந்து மூடி மறைப்பதற்காகவும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் கடைசிகாலத் தடுப்பு முயற்சிகளை முறியடிக்கவும் சிங்கள இனவெறியன் ராஜபக்சே பல்வேறு நாடகங்களை நடத்துவதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் இந்தியாவும், சர்வதேச சமூகமும் மனிதாபிமான அடிப்படையில்கூட இந்த கொடூரமான இனப்படுகொலையை தடுத்து நிறுத்த முன்வரவில்லையே என்பதுதான் சகித்துக்கொள்ளவே முடியாத வேதனையாக உள்ளது.
நாகரிகத்துக்கு எதிரான நடவடிக்கை...
ஆயுதங்களை கீழே போடவும் தயார் என்றும், எத்தகைய தீர்வுக்கும் தயார் என்றும் புலிகளின் தலைவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னரும், ஆயுதமில்லாத நிலையில் வெள்ளைக்கொடி ஏந்தியவாறு சிங்களப்படை அதிகாரிகளைச் சந்திக்க முன்வந்த புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் போன்றவர்களை மிகக் கேவலமான முறையில் சிங்கள இனவெறியர்கள் படுகொலை செய்திருப்பது வரலாற்றில் இல்லாத மனித நாகரிகத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.
இந்த நிலையில் மாவீரர்களாய் களப்பலியான எமது விடுதலைப்போராளிகளுக்கும், அப்பாவி பொதுமக்களுக்கும் எமது வீரவணக்கத்தை செலுத்துகிறோம். புலிகளின் தலைவர்கள் அழிக்கப்பட்டாலும், ஈழ விடுதலைப்போரை அழிக்க முடியாது.
காட்டுமிராண்டி ராஜபக்சேக்கு கண்டனம்...
இருந்தாலும், மறைந்தாலும் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அந்த விடுதலைப்போரை மேலும் வழி நடத்துவார். சிங்கள இனவெறியன் ராஜபக்சேவின் காட்டுமிராண்டித்தனமான கொலை வெறித்தனத்தை விடுதலை சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிப்பதோடு அவனை சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டிப்பதற்குரிய அடுத்தக்கட்டப் பணிகளை மேற்கொள்வது விடுதலை சிறுத்தைகளின் கடமையாகும் என்று கருதுகிறோம்.
புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் உலகத்தமிழர்கள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு சோர்வடையாமல் ஒருங்கிணைந்து போராட முன்வரவேண்டும் என்றார் திருமாவளவன்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications