தடையை மீறி கள் இறக்கிய 3 பேர் கைது!
ஈரோடு: ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியில் தடையை மீறி, தென்னை மரத்திலிருந்து கள் இறக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கள் இறக்க தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இப் பகுதியில் சட்ட விரோதமாக கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு பரவலான புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்களை விடுவிக்க கோரி கொங்கு நாடு முன்னேற்றப் பேரவையைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
கள் இறக்குவது சட்டப்படி தவறு, அவ்வாறு செயல்படுவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று கோவை மாவட்டக் காவல்துறை டிஐஜி ராமசுப்பிரமணியன் கடந்த சில தினங்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்து குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications