பிரான்ஸ் விமான விபத்து-24உடல்கள் மீட்பு
ரியோ டி ஜெனீரோ: அட்லாண்டிக் பெருங்கடலில் 228 பயணிகளுடன் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த 7 பேரின் சடலங்களை பிரேசில் மீட்புகுழுவினர் கைப்பற்றியுள்ளனர். இதனுடன் சேர்த்து இதுவரை 24 உடல்கள் கிடைத்துள்ளது.
கடந்த மே மாதம் 31ம் தேதி பிரேசில் இருந்து பிரான்ஸ் சென்று கொண்டிருந்த ஏர் பஸ் ஏ300 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி மாயமாகி மறைந்தது. தற்போது கிட்டதட்ட 10 நாட்களாகிவிட்ட நிலையிலும் மீட்பு பணிகள் பாதிகூட நிறைவேறவில்லை.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தான் விமானம் விபத்துக்குள்ளான இடம் கண்டறியப்பட்டது. பிரேசிலின் பெர்னான்டோ டி நேரோன்ஹா தீவுக்கு 640 கி.மீ. தொலைவில் அட்லாண்டிக் கடலில் இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில் பல கி.மீ. பரப்பளவுக்கு விமான பாகங்களும் பயணிகளின் உடல்களும் சிதறிக் கிடக்கின்றன. விமானத்தின் வால் பகுதி, 12 சிதறிய பாகங்கள், ஒரு இறக்கைத் துண்டு ஆகியவையும் மீட்கப்பட்டுள்ளன.
இதற்கான மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள பிரேசில் மீட்பு குழுவினர் நேற்று முன்தினம் வரை 17 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மேலும் 7 உடல்கள் மீட்கப்பட்டன. இதுவரை 24 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது கிடைத்துள்ள உடல்கள் மற்றும் விமானத்தின் உதிரி பாகங்களை வைத்து விபத்து குறித்து சில தகவல்களை கண்டுபிடிக்க முடியும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து ஏவியேஷன் பத்திரிகையின் ஆசிரியர் ராபர்ட் வால் கூறுகையில்,
சடலங்கை வைத்து அந்த விமானம் எவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்தது என்பதை தோராயமாக கண்டுபிடிக்க முடியும். அதே போல் விமானங்களை எப்படி உடைத்துள்ளன. விமானத்தின் பாகத்தில் என்ன வகையான சேதம் ஏற்பட்டுள்ளது போன்றவற்றை வைத்து கூட சில சமயங்களில் எந்த மாதிரி விபத்து நடந்துள்ளது என்பதை அறியலாம் என்றார் அவர்.
இந்நிலையில் விபத்தில் இறந்தவர்களுக்கு பாரிசில் இருக்கும் நாட்ரே டேமே தேவாலயத்தில் பிரார்த்தனையும், அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications