சென்னை விமானத்தில் ஆஸ்திரேலியர் தகராறு
சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஏர்ஹோஸ்டசை மோசமான வார்த்தைகளால் திட்டி ஆஸ்திரேலிய நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
எக்கானமி கிளாஸ் டிக்கெட் வாங்கியிருந்த இந்தப் பயணி நேற்று மாலை விமானம் கிளம்ப சிறிது நேரத்துக்கு முன் கூடுதல் பணத்தைக் கட்டி பிஸினஸ் கிளாசுக்கு மாறினார். விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே மதுபானம் கேட்டு வாங்கினார்.
பின்னர் டாய்லெட்டுக்குள் நுழைந்தார். ஆனால், அரை மணி நேரம் ஆகியும் வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பயணிகள் ஏர் ஹோஸ்டரிடம் கூறவே அவர் கதவைத் தட்டினார்.
உள்ளிருந்து எந்த பதிலும் சொல்லாத அந்த நபம் நெடுநேரம் தட்டிய பிறகு கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து ஏர்ஹோஸ்டரை மோசமான வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தார்.
உங்களுக்கு ஏதும் ஆகிவிட்டதோ என்று பயந்து தான் கதவைத் தட்டினோம் என்று பயணிகள் கூறியபோது அவர்களையும் அந்த நபர் திட்டினார். உடனே விமானத்தின் கேப்டனைப் பார்க்க வேண்டும் என தகராறு செய்தார்.
இந் நிலையில் விமானம் இரவு 10.30 மணிக்கு சென்னையை நெருங்கியது. அனைவரையும் சீட்களில் அமர்ந்து பெல்ட் போடுமாறு ஏர்ஹோஸ்டஸ்கள் கூறியபோது அதைக் கேட்காமல் லேண்டிங்கின்போது நின்று கொண்டே இருந்தார் அந்த நபர்.
இதையடுத்து விமானம் தரையிறங்கியதும் அவர் மீது விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தந்தார் விமானி. உடனே விரைந்து வந்த சிஐஎஸ்எப் படையினரை அவரை விமானத்திலிருந்து இறக்கி நேரகாக காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
அங்கு சென்றவுடன் தன்னை மன்னிக்குமாறு ஜெட் ஏர்வேஸ் அதிகாரிகளிடம் கெஞ்ச ஆரம்பித்துவிட்டார் அந்த நபர். இதையடுத்து அவரை எச்சரித்து போலீசார் விடுவித்தனர்.
மஸ்கட் பயணியிடம் தோட்டா!:
இதற்கிடையே சென்னையில் இருந்து மதுரை செல்ல இருந்த விமான பயணியிடம் துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி விளாத்திக்குளம் பகுதியை சேர்ந்த திருமுருகன் என்பவர் மதுரை விமானத்தில் ஏற வந்தார். அவரது கைப்பையை சோதனையிட்டபோது அதில் 0.38 எம்எம் துப்பாக்கித் தோட்டா இருந்தது.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, மஸ்கட்டில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருவதாகதவும் தன்னுடன் பணிபுரிந்த அலெக்சாண்டர் என்பவர் சில நாட்களுக்கு முன் இறந்துவிட்டதையடுத்து அவரது உடலை சென்னை கொண்டு வந்ததாகவும்,
தோட்டா இருந்தது அலெக்சாண்டரின் கைப் பை என்றும், அதி்ல் தோட்டா இருந்தது தனக்குத் தெரியாது என்றும் கூறினார்.
இதையடுத்து திருமுருகன் மதுரை செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அலெக்ஸாண்டரின் உடலும் இறக்கப்பட்டு அது திருமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications