அத்வானியை சந்தித்தனர் இலங்கைத் தமிழ் எம்.பிக்கள்

Subscribe to Oneindia Tamil

TNA leaders with Advani
டெல்லி: தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பிக்கள் குழு பாஜக மூத்த தலைவர் அத்வானியை சந்தித்து இலங்கை நிலவரம் குறித்து விவாதித்தது.

டெல்லி வந்துள்ள இலங்கை தமிழ் எம்.பிக்கள் குழு, நேற்று மாலை அத்வானியை, சந்தித்துப் பேசியது. இந்தக் குழுவில் இரா. சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள மக்களை விரைவில் அவர்களது சொந்த ஊர்களில் குடியமர்த்தும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், தமிழர்களின் தாயக, தன்னாட்சி, சுய நிர்ணய உரிமைக்கு ஆதரவு வழங்குமாறும் அத்வானியை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

மேலும், ஈழத் தமிழர்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட இந்திய அரசு சார்பில் ஒரு குழுவை அமைக்கவும், அதில் பாஜக சார்பில் ஒரு பிரதிநிதியை இடம் பெறச் செய்யவும் உதவுமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

அவர்களது கருத்தைக் கேட்டுக் கொண்ட அத்வானி, தமிழ் மக்களுக்கான பாஜகவின் ஆதரவு என்றும் தொடரும், மத்திய அரசுடன் இதுகுறித்து பேசுவதாக உறுதியளித்ததாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தங்களது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்ட தமிழ் எம்.பிக்கள் குழு இன்று கொழும்பு செல்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+