ஜாமீன் ரத்து - சரணடைய ராஜ் தாக்கரேவுக்கு கோர்ட் உத்தரவு
மும்பை: மும்பையில் கடந்த ஆண்டு நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு அளிக்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்து விட்டது மும்பை உயர்நீதிமன்றம். அவர் 29ம் தேதி ரயில்வே கோர்ட்டில் சரணடைய வேண்டும் எனவும் அது உத்தரவிட்டுள்ளது.
2008ம் அக்டோபர் 19ம் தேதி ஆண்டு ரயில்வே வாரிய தேர்வை எழுதுவதற்காக வந்த வட இந்திய மாணவர்கள் மீது கல்யாண் ரயில் நிலையத்தில் ராஜ் தாக்கரே கட்சியினர் பெரும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து ராஜ் தாக்கரே மீது ரயில்வே போலீஸர் வழக்குப் பதிவு செய்தனர். அவர் கைதும் செய்யப்பட்டார். ஆனால் அதன் பின்னர் அவருக்கு கல்யாண் செஷன்ஸ் கோர்ட் முன்ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில், இந்த முன்ஜாமீன் வழங்கப்பட்டது தொழில்நுட்ப ரீதியாக தவறு, செல்லாது என்று கோரியும், ராஜ் தாக்கரேவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியும், மகாராஷ்டிர அரசு சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரேகா, தற்போதைய நிலையில், போலீஸ் காவலில் வைத்து ராஜ் தாக்கரேவை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உத்தரவிட்டார்.
இருப்பினும், கல்யாண் செஷன்ஸ் கோர்ட் முன்ஜாமீன் வழங்குவதற்கு முன்பே ராஜ் தாக்கரேவை ரயில்வே போலீஸார் கைது செய்து விட்டதால், அவருக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும், அது செல்லாது என்று வாதிட்ட அரசு வக்கீலின் வாதத்தை கோர்ட் ஏற்றுக் கொண்டது.
முன்ஜாமீனை ரத்து செய்த உயர்நீதிமன்றம்,வருகிற 29ம் தேதி ரயில்வே கோர்ட்டில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications