இந்தியாவில் 31 பேருக்கு ஸ்வைன் ப்ளூ பாதிப்பு
டெல்லி: இந்தியாவில் ஸ்வைன் ப்ளூ தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றி காய்ச்சல் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவிலிருந்து வருபவர்கள் மூலம் இந்தியாவில் இது பரவ துவங்கியுள்ளது. இதையடுத்து முடிந்தவரை அமெரிக்க பயணத்தை தள்ளி போடுங்கள் என மத்திய சுகாதார துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவி்த்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூன் 14ம் தேதி, அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் இருந்து ஹைதராபாத் வந்த 11 வயது சிறுவனுக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவனுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து இந்தியாவில் ஸ்வைன் ப்ளூவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் நாசாவில் இருந்து டெல்லி வந்து மாணவர்கள் 8 பேருக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுடன் நாசாவுக்கு சென்ற மற்ற 23 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 16 வீட்டுக்கு அனுப்பட்டனர்.
இது குறித்து பஞ்சாப் மாநில ஸ்வைன் ப்ளூ தடுப்பு அதிகாரி தீபக் பாட்டியா கூறுகையில்,
7 மாணவர்கள் மட்டும் தனி அறையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர். தற்போது அவர்களில் மூன்று பேருக்கு ஸ்வைன் ப்ளூ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற நான்கு பேரின் ரத்த மாதிரிகள் இன்று சோதனைக்காக தேசிய தொற்று நோய் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மேலும் ஐந்து பேருக்கு ஸ்வைன் ப்ளூ அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இங்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலர் சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் அனைவரும் வேகமாக குணமடைந்து வருகி்ன்றனர்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் நெருங்கி பழகிய 296 பேருக்கு ஸ்வைன் ப்ளூ இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
ஸ்வைன் ப்ளூவை தடுக்கும் நோக்கத்தில் தேசிய தொற்று நோய் நிறுவனம் அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. மற்ற டாக்டர்களுக்கு இன்னும் இரண்டு நாளில் பயிற்சி கொடுக்கப்படும் என்றார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications