சான்றிதழுக்கு லஞ்சம்-4 ஆசிரியர்கள் கைது !
Subscribe to Oneindia Tamil
சிவகாசி: சிவகாசி அருகே பத்தாவது வகுப்பு சான்றிதழ் மற்றும் டிசி வழங்க லஞ்சம் வாங்கிய 4 ஆசிரியர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சிவகாசியை அடுத்து உள்ளது திருத்தங்கல். இங்கு அரசு உயர் நிலைப் பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்க மாணவர் ஒருவருக்கு தலா 50 ரூபாய் வீதம் கட்டாயமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அந்த பள்ளியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சோதனையில், மாணவர்களிடம் சான்றிதழ் வழங்க வசூல் செய்த 4 ஆசிரியர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினர்.
அவர்களிடம் இருந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த 4 ஆசிரியர்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications