ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு - ஜூலை 23க்கு பெங்களூர் கோர்ட் ஒத்திவைப்பு
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனி கோர்ட்டில் ஜூலை 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று இந்த வழக்கு தனி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன், சமீபத்தில் லண்டன் ஹோட்டல் வழக்கை வாபஸ் பெற தமிழக அரசு முடிவு செய்தது.
எந்த அடிப்படையில் இந்த முடிவை தமிழக அரசு எடுத்தது என்பது குறித்த ஆவணங்களை எங்களுக்குத் தர வேண்டும்.
இதைக் கேட்டுப் பெற மனுதாரருக்கு உரிமை உள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 321வது பிரிவின் கீழ், வழக்கை வாபஸ் பெறுவதை எனது கட்சிக்காரர் எதிர்க்கவில்லை. மாறாக, அதுதொடர்பான ஆவணங்களின் நகலை அவர் பெற உரிமை உண்டு.
வழக்கை வாபஸ் பெறுவது என்பது அரசுக்கும், கோர்ட்டுக்கும் இடையிலான பிரச்சினை என்றாலும் கூட இதுகுறித்து மறு ஆய்வு மனு ஒன்றை எனது கட்சிக்காரர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால் ஆவண நகல்களை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.
இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை ஜூலை 23ம்தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
கடந்த ஏப்ரல் 30ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்குடன் இணைக்கப்பட்ட லண்டன் ஹோட்டல் வழக்கை தமிழக அரசு வாபஸ் பெறுவது தொடர்பாக தனி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
இதையடுத்து தன் மீதான வழக்கை வாபஸ் பெற அரசுத் தாக்கல் செய்த ஆவணங்களின் நகல்களைக் கோரி மே 25ம் தேதி ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications