கோயம்பேட்டில் வி.சி. பிரமுகர் கொடூர கொலை
சென்னை: சென்னை கோயம்பேட்டில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருந்தவர் கிருஷ்ணமூர்த்தி. 35 வயதாகும் இவரது சொந்த ஊர் திட்டக்குடி அருகே உள்ள மருவத்தூர். அக்கிராம விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைச் செயலாளராக இருந்து வந்தார்.
கடந்த ஐந்து வருடங்களாக கோயம்பேடு மார்க்கெட்டில், வேலை பார்த்து வந்தார். அடிக்கடி ஊர் போய் வருவது வழக்கம்.
அதேபோல 2 நாட்களுக்கு முன்பும் ஊர் சென்று திரும்பினார்.
ஊருக்குப் போய் விட்டு வந்த அவர் நேற்று இரவு மார்க்கெட்டில் உள்ள ஒரு கடை முன்பு படுத்துத் தூங்கினார். இந்த நிலையில் இன்று காலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார் கிருஷ்ணமூர்த்தி.
உடனடியாக விரைந்து வந்த போலீஸார் பிரேதத்தைக் கைப்பற்றினர்.
மார்க்கெட்டில் நடத்திய விசாரணையில், பெண் விவகாரம் தொடர்பாக கிருஷ்ணமூர்த்திக்கும், அவரது அண்ணன் தங்கராஜ் என்பவருக்கும் இடையே சண்டை இருந்து வந்தது தெரிய வந்தது.
அதாவது தங்கராஜுவின் மனைவியுடன், கிருஷ்ணமூர்த்தி கள்ளத் தொடர்பு வைத்திருந்தாராம். இது தொடர்பாக ஊருக்குப் போயிருந்தபோது கிருஷ்ணமூர்த்திக்கும், தங்கராஜுக்கும் இடையே மோதல் மூண்டது. ஊரில் உள்ளவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.
பின்னர் ஊர் திரும்பினார் கிருஷ்ணமூர்த்தி. அவருக்குத் தெரியாமல் அவரைப் பின் தொடர்ந்து வந்துள்ளார் தங்கராஜு. மார்க்கெட்டுக்கு வந்து தூங்கியவரை கொடூரமாகக் கொன்று விட்டுத் தப்பியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
தலைமறைவாகி விட்ட தங்கராஜுவைப் பிடிக்க போலீஸார் வலை வீசியுள்ளனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications