மீண்டும் பறக்கும் தட்டு - இங்கிலாந்து மக்கள் பீதி
லண்டன்: இங்கிலாந்தை சேர்ந்த சில வாலிபர்கள் வானில் வினோத பொருட்களை கண்டோம். அவை பறக்கும் தட்டாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
வேற்று கிரகவாசிகள், பறக்கும் தட்டு குறித்த பேச்சுக்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் கூடுதல் சுவாரசியம் இருக்க தான் செய்யும். இதனால் பறக்கும் தட்டு, வேற்று கிரகவாசிகளை மையமாக வைத்த படங்கள் வசூலில் சக்கை போடு போட்டுள்ளன.
பறக்கும் தட்டுகளை போலவே அது தொடர்பான செய்திகள் படுவேகமாக வரும். பின்னர் சில நாட்களில் அப்படி ஒரு செய்தி வந்ததையே அனைவரும் மறந்து விடுவார்கள். தற்போது மீண்டும் ஒரு முறை பறக்கும் தட்டை பார்த்ததாக இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
இது கடந்த 13ம் தேதி இரவு உல்ஸ்வாட்டர் என்ற பகுதியில் இருந்தவர்களுக்கு தெரிந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் டெலிகிராப் நாளிதழுக்கு பால் ஹைக் என்ற 28 வயது வாலிபர் கொடுத்த பேட்டியில்,
அன்று இரவு அனைவரும் தூங்கி கொண்டிருந்த நேரம். நாங்கள் திடீரென்று ஏதோ சத்தம் கேட்டு எழுந்தோம். அப்போது எங்களுடன் இருந்த ஒருவர் வானத்தில் மின்னும் வினோத பொருள் ஒன்றை காட்டினார்.
அதை பார்க்க எங்களுடன் தங்கியிருந்த அனைவரும் டென்டில் இருந்து வெளியே வந்தனர்.
பார்த்தவுடன் ஆங்கில படங்களில் வரும் பறக்கும் தட்டு போல் எங்களுக்கு தோன்றியது. திகில் ஏற்பட்டது. அவை ஏற்படுத்திய ஒளி எங்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவை சீரான ஒரு பாதையில், ஆனால், நேராக இல்லாமல் பறப்பதை போல் எங்களுக்கு தோன்றியது. அவற்றின் வெளிச்சம் அதிகரிப்பதும், மங்குவதுமாக இருந்தது.
மொத்தம் ஆறு தட்டுக்கள் இருந்தன. ஆனால் அவை அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியவில்லை. ஒன்றின் வெளிச்சம் மங்கிய போது மற்றவை வெளிச்சம் கூட ஆரம்பித்தன.
பறக்கும் தட்டுகள் தொடர்பாக பல கருத்துக்கள் வந்துள்ளன. ஆனால், இதை சிலர் சீன விளக்கு என்கின்றனர். சில விளக்குகள் இவ்வளவு பெரிதாக இருக்கவும் வாய்ப்பில்லை. அதே நேரத்தில் சீன விளக்குகளால் பறக்கவும் முடியாது. அவை காற்றில் ஆடுவது போலவும் எங்களுக்கு தெரியவில்லை. அவை தானே இயங்ககூடிய ஒரு எந்திரம் போல் தான் தெரிந்தது என்றார்.
இது குறித்து லீட்ஸ் நகரை சேர்ந்த லூசி கிரே என்ற 26 வயது இளைஞர் கூறுகையில், அவைகளின் அசைவுகள் நடனம் போல் இருந்தது. இது போன்ற வினோதமானதை நான் இதுவரை பார்த்ததே கிடையாது. என்னால் அதை விவரிக்க முடியவில்லை. இது விமான படையின் பயிற்சி என்று யாரும் சொல்லவில்லை என்றால் அது பறக்கும் தட்டு தான் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications