கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய நீதி மன்றம் உத்தரவு
திருவண்ணாமலை: அரசுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நிலுவை தொகை வழங்காததால், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில், தாமரை நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது.
இந்த குடியிருப்பு, 1987-88 -ம் ஆண்டில் கட்டப்பட்டது. அதற்காக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், வருவாய்த் துறை மூலம் 20 ஏக்கர் பட்டா நிலத்தை கையகப்படுத்தியது.
ஆனால் அந்த நிலத்துக்கு மிகக்குறைவான விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதை நிலத்தின் உரிமையாளர்கள் ஏற்கவில்லை. தங்கள் நிலத்திற்கு உரிய விலை வேண்டி திருவண்ணாமலை நீதி மன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட நீதி மன்றம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிலத்திற்கு சதுர அடிக்கு 12 ரூபாய் விலை வழங்க கோர்ட் உத்தரவிட்டது.
ஆனால், அதை ஏற்க வீட்டு வசதி வாரியம் மறுத்து சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தது.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டும், சதுர அடிக்கு 12 ரூபாய் விலை வழங்குவதை உறுதி செய்தது. இதன் பின்பு , சுப்ரீம் கோர்ட்டில் வீட்டு வசதி வாரியம் மூலம் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம்
கோர்ட்டும் உறுதி செய்தது.
கோர்ட் தீர்ப்பு வெளியாகி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நிலத்தின் உரிமையாளர்ளுக்கு இதுவரை நிலுவை தொகை வழங்கப்படவில்லை.
இதனால், பாதிக்கப்பட்ட திருவண்ணாமலையை சேர்ந்த முகமது அலி, முகமது கவுஸ், ஆகியோர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த கோரி வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதி சாம்பசிவம், வீட்டு வசதி வாரியத்துக்கு நிலத்தை கையகப்படுத்தி கொடுத்த வருவாய் துறையை சார்ந்த
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக தளவாட பொருட்களையும், ஆர்.டி.ஓ., அலுவலக
தளவாட பொருட்களையும், காரையும் ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications