ஏர் பிரான்ஸ் கருப்புப் பெட்டி 'சிக்னல்' கிடைத்தது!

கடந்த 1ம் தேதி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரிலிருந்து பாரிஸ் நோக்கி சென்று கொண்டிருந்த இந்த விமானம் அட்லாண்டிக் கடலில் மர்மமான முறையில் விபத்துக்குள்ளானது.
கிட்டத்தட்ட ஒரு வாரகால தேடுதல் வேட்டைக்குப் பின்னர் பிரேசிலிருக்கு 400 கி.மீ. தொலைவில் கடலில் விமானத்தின் சிதறிய பாகங்களும் பயணிகளின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
228 பேருடன் சென்ற அந்த ஏர் பஸ் ஏ 330 ரக விமானத்தின் வால் பகுதி மற்றும் சில பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 50 உடல்களே மீட்கப்பட்டுள்ளன. இதில் 11 உடல்களே அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 10 பேர் பிரேசிலைச் சேர்ந்தவர்கள்.
இந் நிலையில் விபத்துக்கான காரணத்தை அறிய உதவும் விமானத்தின் கருப்புப் பெட்டியைத் தேடும் பணியில் பிரேசில், பிரான்ஸ் நாட்டு கடற்படை, விமானப் படையினர் ஈடுபட்டு வந்தனர்.
இந் நிலையில் பிரான்சின் சிறிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கருப்புப் பெட்டியிலிருந்து வெளியான சிக்னலை கண்டுபிடித்துள்ளது.
இதையடுத்து கருப்புப் பெட்டி இருக்கும் இடம் தெரியவந்துள்ளது. அதை மீட்டெடுக்கும் வேலையில் இப்போது இரு நாட்டு கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
பிரான்ஸ்சின் கடல் ஆய்வு மையமான Ifremer நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த நீர்மூழ்கி தான் டைட்டானிக் கப்பலை கண்டுபிடிக்க உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications