சிபிஎம் தலைவர்கள் மிகவும் பிடிவாதமானவர்கள், யாரையும் மதிப்பதில்லை - பரதன்
டெல்லி: ஆட்சிக்கு வந்து விட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பிடிவாதக்காரர்களாகி விடுகிறார்கள். தன்னிஷ்டப்படிதான் செயல்படுகிறார்கள். மேற்கு வங்க நக்சலைட் விவகாரத்திற்கு முதல்வர் புத்ததேவ்தான பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார் சிபிஐ பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன்.
இதுகுறித்து சிஎன்என் ஐபிஎன் டிவிக்கு பரதன் அளித்துள்ள பேட்டி..
மேற்கு வங்க மாநிலத்தில் ஏதோ தனிக் கட்சி ஆட்சி நடப்பது போல மார்க்சிஸ்டுகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு கூட்டணி ஆட்சி நடைபெறுவதாகவே அவர்கள் கருதவில்லை.
லால்கர் வன்முறைக்கு ஆதிவாசி மக்களை அரசு புறக்கணித்ததே காரணம். இதற்கு முதல்வர் புத்ததேவ்தான் பொறுப்பேற்க வேண்டும்.
யாருடைய ஆலோசனையையும் கேட்பதற்கு மார்க்சிஸ்டுகள் தயாராக இருப்பதாகவே தெரியவில்லை. என்னை எந்த விஷயத்திலும் அவர்கள் கலந்து ஆலோசிப்பதில்லை. மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி அரசின் பல்வேறு தோல்விகளுக்கு அதுவே காரணம்.
மேற்கு வங்கத்தில் மட்டுமல்லாது கேரளாவிலும் கூட ஆட்சிக்கு வந்தவுடன் தங்கள் இஷ்டப்படி, பிடிவாதப் போக்குடன் நடக்க ஆரம்பித்து விடுகிறார்கள் மார்க்சிஸ்டுகள்.
லால்கரைப் புறக்கணித்தது மேற்கு வங்க அரசு செய்த தவறு. அந்த மக்களுக்காக மேற்கு வங்க அரசு எதையும் செய்யவில்லை. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக அங்குள்ள மக்களை முன்னேற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
செய்ய முடியாத நிலையில் மேற்கு வங்க அரசு இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் புறக்கணிப்பு மனோபாவத்துடன் மேற்கு வங்க அரசு இருந்து வருகிறது. முக்கியமாக பழங்குடியின மக்களின் நலனை மேற்கு வங்க அரசு கருத்தில் கொள்ளவில்லை.
இப்போதைய நிலையில் மமதா பானர்ஜியும், திரினமூல் காங்கிரஸும் எங்களது பலவீனத்தையே அவர்களது பலமாக மாற்றிக் கொள்ள முனைகிறார்கள்.
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று நடந்து கொண்டிருக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் புத்ததேவ்தான் பொறுப்பேற்க வேண்டும். அதற்காக அவர் பதவி விலக வேண்டுமா என்று கேட்டால் நான் பதிலளிக்க விரும்பவில்லை. அதை புத்ததேவிடம்தான் கேட்க வேண்டும். யார் முதல்வராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அங்கு இடதுசாரி ஆட்சி இருக்கும் என்றார் பரதன்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications