பைதுல்லா தலைக்கு ரூ. 5 கோடி-பாக். அறிவிப்பு
இஸ்லாமாபாத்: தாலிபான் தலைவர் பைதுல்லா மசூதை உயிருடனோ, பிணமாகவோ பிடித்து தருபவர்களுக்கு ரூ. 5 கோடி பரிசு அளிக்கப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
தாலிபான்களை ஒழிக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா படு தீவிரமாக இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து விரட்டப்பட்ட தாலிபான்கள் தற்போது ஆப்கானிஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லை பகுதியில் தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களை அங்கிருந்து முற்றிலுமாக அழிக்க வேண்டும் என அமெரிக்க அரசு பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
இதையடுத்து பாகிஸ்தான் கடந்த 6 மாத காலமாக வடமேற்கு எல்லைப்பகுதியில் தாலிபான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது பாகிஸ்தான் அரசு தனது குறியை மெல்ல தெற்கு வசிர்ஸ்தான் பகுதியை நோக்கி மாற்றியுள்ளது. அங்கு இருக்கும் தாலிபான் பாகிஸ்தான் பிரிவு தலைவர் பைதுல்லா மசூத்தை கைது செய்ய முயன்று வருகிறது.
இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மசூதை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்து கொடுத்தால் அவர்களுக்கு ரூ. 5 கோடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு பத்திரிகைகளில் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்க அரசு இவரின் தலைக்கு ரூ. 25 கோடி விலை நிர்ணயித்தது குறிப்பிடத்தக்கது.
இவனை தவிர தாலிபான் இயக்கத்தை சேர்ந்த இன்னும் சிலர் குறித்து தகவல் கொடுப்பதற்கும் பாகிஸ்தான் அரசு பரிசு தொகை அறிவித்துள்ளது.
பாடா பகுதியில் இருக்கும் பஜவுர் இயக்கத்தை சேர்ந்த மொல்வி பகிர் குறித்து துப்ப தருபவர்களுக்கு ரூ. 1.5 கோடியும், அவருடன் இயங்கி வரும் மற்ற ஐந்து பேர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ. 1 கோடியும் கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
மேலும், சில தீவிரவாதிகளை குறித்து துப்பு தந்தால் ரூ. 50 வழங்கப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications