Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக கடலோர பாதுகாப்புக்கு டெல்லி ரூ. 44 கோடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடலோரக் காவல் படையை பலப்படுத்த மத்திய அரசு ரூ. 44 கோடி ஒதுக்கியுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

சட்டசபையில் அதிமுக உறுப்பினர் குணசேகரன் இது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர்,

தமிழகத்தில் கடலோரக் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் கடலோரக் காவல் படையை பலப்படுத்தவும் மத்திய அரசு ரூ. 44 கோடி ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் 12 கடலோர காவல் நிலையங்கள், 12 புறக்காவல் நிலையங்கள் மற்றும் 40 சோதனைச் சாவடிகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதில் 12 கடலோர காவல் நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. அவற்றில் 8 காவல் நிலையங்களில் 16.06.2008 அன்றும், 4 காவல் நிலையங்களில் 15.12.2008 அன்றும் பணிகள் தொடங்கப்பட்டன.

12 புறக்காவல் நிலையங்களில் 2 புறக்காவல் நிலையங்களுக்கான கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. ஏனைய இடங்களில் விரைவில் கட்டடங்கள் கட்டி முடிக்கப்படும். 40 புதிய சோதனைச் சாவடிகளில் 6 சோதனைச்சாவடிகளுக்கான கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன.

12 கடலோர காவல் நிலையங்களுக்கு, ஒவ்வொரு நிலையத்திற்கும் தலா ஒரு 12 டன் இயந்திரப் படகும், ஒரு 5 டன் இயந்திரப் படகும், ஆக மொத்தம் 24 இயந்திரப் படகுகள் மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது. இவற்றுள் ஒரு 12 டன் இயந்திரப் படகும், ஒரு 5 டன் இயந்திரப் படகும் தற்போது வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 22 இயந்திரப் படகுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்பட்டுவிடும்.

கடலோர பாதுகாப்புக்கென்று இதுவரை 120 தமிழக காவலர்கள் இந்திய கடலோர காவல் படையினரிடம் அடிப்படை பயிற்சி பெற்றுள்ளனர். கப்பலில் மூன்று நாட்கள் பயணமாக சென்னையிலிருந்து மண்டபம் வரை சென்றது இப்பயிற்சியிலடங்கும்.

இப்பயிற்சி இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில்தான் அளிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள், அன்னிய சக்திகளின் ஊடுருவலைத் தடுக்க மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+