நெல்லை அருகே காதல் ஜோடி எஸ்கேப் - காதலன் வீடு சூறை
நெல்லை: காதல் ஜோடி ஊரை விட்டு ஓடியது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினரும், உறவினர்களும் காதலனின் வீட்டை அடித்து சூறையாடினர்.
நெல்லை அருகே உள்ள சிவந்திபட்டி கார்மேகனார் தெருவை சேர்ந்தவர் வீரபாண்டி மகன் கோட்டியப்பன். கட்டிட தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த பலவேசம் மகள் லெட்சுமி என்பவரும் காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் ஜோடி ஊரை விட்டு வெளியேறி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
இதையறிந்த லட்சுமியின் உறவினர்கள் கோட்டியப்பனின் வீட்டுக்கு சென்று தகராறு செய்தனர். இதையடுத்து அவரது தாய், தந்தை, தங்கை வீட்டை பூட்டிவிட்டு அருகிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு பலவேசம், அவரது மனைவி பேச்சியம்மாள், மகன்கள் மாணிக்க கணேஷ், ராம சுப்பிரமணியன், உறவினர் ராமையா ஆகியோர் கோட்டியப்பன் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த டிவி, கட்டில், பீரோ, மெத்தை, சைக்கிள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர்.. பின்னர் துணிகளுக்கு தீ வைத்தனர்.
வீடு முழுவதும் தீ பரவியதை அடுத்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பாளை தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் கணேசன, ஏட்டு ஜெயபால் ஆகியோர் தலைமையில் வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.
இதுதொடர்பாக சிவந்திபட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜக்குபாய், விசாரணை நடத்தி பேச்சியம்மாள், மாணிக்க கணேஷ், ராமையா ஆகியோரை கைது செய்தனர். பலவேசம், ராமசுப்பிரமணியன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
தீ வைத்து கொளுத்தப்பட்ட கோட்டியப்பனின் வீடு போலீஸ் நிலையம் அருகில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications