படிப்பதில் சிரமம் எம்பிபிஎஸ் மாணவர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவர் ஒருவர் பாடங்களைப் படிப்பது சிரமமாக இருந்ததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பெரம்பலூரைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். 19 வயதாகும் இவர் மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ், படித்து வந்தார்.
இந்த நிலையில், கல்லூரி விடுதியில் பாக்கியராஜ் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பாடங்களைப் படிப்பதில் பாக்கியராஜ் சிரமப்பட்டு வந்ததாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பாக்கியராஜ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையி்ல் பொறியியல் படிப்பு படித்து வந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் ஆங்கிலத்தில் பாடம் படிக்க முடியாமல் சிரமப்பட்டு தற்கொலை செய்து கொண்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications