அஞ்சு, பத்து.. கடன உடன வாங்கி..!-அரசு படும் பாடு

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டின் 2009-10ம் ஆண்டுக்கான வரவு-செலவு விவரம்,
ஒரு ரூபாயில் வரவு:
கடன்கள்-பிற வகைகள் மூலமாக வரவு- 34 பைசா
நிறுவனங்கள் மீதான வரி- 22 பைசா
கடன்கள் அல்லாத மூலதன வரவு- 1 பைசா
வரியல்லாத வருமானம்- 12 பைசா
சேவை வரி வருமானம்- 5 பைசா
வருமான வரி வருவாய்- 9 பைசா
சுங்க வரி வருமானம்- 8 பைசா
உற்பத்தி வரி மூலமான வருவாய்- 9 பைசா
ஒரு ரூபாயில் செலவு:
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான திட்டம் சாரா செலவுகள்- 4 பைசா
வரி வருவாயில் மாநில அரசுகளுக்கு தர வேண்டிய பங்கு- 14 பைசா
மத்திய அரசின் திட்டம் சாரா செலவுகள்- 14 பைசா
மானியங்கள் வழங்க- 10 பைசா
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான திட்டச் செலவு- 7 பைசா
மத்திய அரசின் திட்டச் செலவு- 20 பைசா
கடன்களுக்கு வட்டி செலுத்த- 19 பைசா
பாதுகாப்புத்துறைக்கு- 12 பைசா
மத்திய அரசின் மொத்த வருவாயில் 66 சதவீதம் வருவாய் மூலமும் 34 சதவீதம் கடன்களை வாங்கியும் சரி கட்ட இந்த பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி ரூபாயைக் கடனாக வாங்கி நிலைமையைச் சமாளிக்க உள்ளது மத்திய அரசு.
இந்தக் கடன்களுக்கு மத்திய அரசு வட்டியாகச் செலுத்த வேண்டிய தொகை மட்டும் ரூ.2.25 லட்சம் கோடியாக உயரும். கடந்த ஆண்டு இது ரூ.1.91 லட்சம் கோடியாக இருந்தது.
மேலும் அரசின் மொத்த வரி வருவாய் ரூ.6.41 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.6.87 லட்சம் கோடியாக இருந்தது. சர்வதேச அளவில் காணப்படும் பொருளாதார சிக்கலால் அரசின் வருவாய் குறைந்துவிட்டது.
அரசின் வருவாய்ப் பற்றாக்குறையைப் போக்க அரசு நிறுவனப் பங்குகள் விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டாலும் இந்த ஆண்டு பெரிய அளவில் இதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.
வெறும் ரூ. 1,100 கோடி ரூபாய் மட்டும் வருவாய் கிடைக்கும் வகையில் பங்கு விற்பனை இருக்கும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
அரசியல் நன்கொடைகளுக்கு 100% வரிவிலக்கு:
அரசியல் கட்சிகளுக்கு தொழில் நிறுவனங்கள் தரும் நன்கொடைக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படவுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications