கே-ஹோமோ:அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது சட்டவிரோதமல்ல என்று தீர்ப்பளித்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில், டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பில் மனமுவந்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதும், செக்ஸ் வைத்து்க கொள்வதும் தவறல்ல. அது சட்டவிரோதமானதும் அல்ல.
இதை தடை செய்யும் 377வது சட்டப் பிரிவு செல்லாது என்று கூறியிருந்தது.
இதற்கு பரவலாக எதிர்ப்பும், வரவேற்பும் காணப்படுகிறது. இந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது.
இதை பரிசீலித்த உச்சநீதிமன்றம், ஜூலை 20ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications