கல்வி அதிகாரியை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆசிரியர்களை அவமரியாதை செய்து வரும் உதவி தொடக்க கல்வி அதிகாரியை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெங்கடேசன் என்பவர் உதவி கல்வி அலுவலகராக பொறுப்பேற்றார்.அவர் கடந்த 3ம் தேதி நடந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது கூட்டத்தில் பங்கேற்ற அவர் ஆசிரியர்களை கடுமையாக குறைகூறியும், அவமானப்படுத்தும் விதமாகவும் பேசியுள்ளார். தனது பேச்சை கேட்காதவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க போவதாகவும், யாருக்கும் ஊதிய உயர்வு கிடைக்காது என்றும் கூறி மிரட்டியுள்ளார்.
மறுநாள் நடந்த குறைதீர் கூட்டத்துக்கு சென்ற ஆசிரியர்களை அலுவலகத்தை விட்டு வெளியேற்றியுள்ளார். இதனால்கொதிப்படைந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இதையடுத்து நேற்று மாலை சுமார் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாவட்ட துவக்க கல்வி அலுவலகம் முன்பு, வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி புகார் கொடுத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications