கூட்டுறவு வங்கி காவலாளி கொலை - கொள்ளையர்கள் அட்டகாசம்
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் உள்ள வேளாண்மை கூட்டுறவு வங்கியில் காவலாளியை கொலை செய்து விட்டு வங்கியில் இருந்த பணம் நகைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்த கொள்ளையர்கள் பொது மக்களை கண்டதும் தப்பிச் சென்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ளது குருநள்ளி பாளையம். இங்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வங்கி செயல்பட்டு வருகின்றது.
இந்த வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் காவலாளியை கொலை செய்து விட்டு வங்கியில் இருந்த பணம் நகைகள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். இதில், பலமான சத்தம் கேட்கவே பொது மக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதைக் கண்ட கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இச் சம்பவம் குறித்து கிணத்துகடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.












Click it and Unblock the Notifications