மாணவர்கள் மத்தியில் மீண்டும் ஐடி.க்கு 'மவுசு'
சென்னை: என்ஜினியரிங் மாணவர்கள் மத்தியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐடி படிப்புகளுக்கு மீண்டும் மவுசு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு பொறியியல் கல்லூரி கவுன்சிலிங்கில் நேற்று அதிக மாணவர்கள் கம்ப்யூட்டர் படிப்பை தேர்வு செய்தனர்.
தமிழ்நாடு பொறியியல் கல்லூரி சேர்க்கை கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் நாளில் ஐடி படிப்பில் சேர இரண்டு மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். அதே நேரத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை 75 பேர் தேர்வு செய்தனர்.
இந்நிலையில் நேற்று இந்த நிலைமை வெகுவாக மாறியிருந்தது. மாணவர்கள் ஐடி மற்றும் கம்ப்யூட்டர் சயின்சை தேர்வு செய்வதில் அதிக ஆர்வம் காட்டினர். இதையடு்த்து நேற்று மட்டும் ஐடியை 203 மாணவர்களும், கம்ப்யூட்டர் சயின்சை 314 மாணவர்களும் தேர்வு செய்தனர்.
முதல் நாளில் அதிக பேர் தேர்வு செய்த படிப்புகள் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த மெக்கானிக்கல் என்ஜினியரிங், ஜடியின் எழுச்சியால் மூன்றாவது இடத்துக்கு சென்றுள்ளது.
முதல் இரண்டு நாட்களில் மெக்கானிக்கல் படிப்பில் 241 பேரும், சிவில் என்ஜினியரிங்கில் 104 பேரும் சேர்ந்துள்ளனர்.
இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
நேற்று 2,462 பேருக்கு கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அவர்களில் 527 பேர் வரவில்லை. வந்தவர்களில் 5 பேர் தாங்கள் விரும்பிய கல்லூரி மற்றும் துறை கிடைக்காததால் திரும்பி சென்றுவிட்டனர். ஒரு மாணவர் சில காரணங்களால் திருப்பி அனுப்பப்பட்டார் என்றார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications