குடியிருப்பில் பெண் போலீஸை தாக்கிய எஸ்.ஐ
சண்டிகர்: பஞ்சாப் காவல்துறை குடியிருப்புக்குள் புகுந்து பெண் போலீஸ்காரரை பட்டப் பகலில், நூற்றுக்கணக்கானோர் கண் முன்பாக வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து சரமாரியாக தாக்கினார் சப் இன்ஸ்பெக்டர்.
சண்டிகர் 9வது செக்டார் பகுதியில் பஞ்சாப் போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்கு 39 வயதாகும் குர்தர்ஷன் கெளர் என்ற கான்ஸ்டபிள் வசித்து வருகிறார்.
நேற்று இங்கு சப் இன்ஸ்பெக்டர் சர்ஜீவன் சிங் என்பவர் வந்தார். குர்தர்ஷன் கெளரை வீட்டை விட்டு தரதரவென வெளியே இழுத்து வந்தார். இதைப் பார்த்ததும் அங்கு கூட்டம் கூடி விட்டது.
வெளியில் இழுத்து வந்த குர்தர்ஷன் கெளரை சரமாரியாக தாக்கத் தொடங்கினார் சர்ஜீவன் சிங். இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போயினர். பின்னர் அவர்களில் சிலர் உள்ளே புகுந்து சிங்கைத் தடுத்து கெளரை மீட்டனர்.
தகவல் அறிந்து உயர் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அநாகரீகமாகவும், மிருகத்தனமாகவும் நடந்து கொண்ட சர்ஜீவன் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
குர்தர்ஷன் கெளர் இன்டலிஜென்ஸ் பிரிவில் பணியாற்றி வருகிறார். இதே பிரிவில் 7 மாதங்களுக்கு முன்பு மாற்றப்பட்டார் சிங்.
இச்சம்பவம் குறித்து கெளர் கூறுகையில், எனது தலைமுடியைப் பிடித்து இழுத்து வந்து சுவரில் மோத வைத்தார் சர்ஜீவன் சிங். மேலும், எனது வயிற்றிலும் காலால் எட்டி உதைத்தார்.
செக்டார்-3 காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தும் அவர்கள் உடனடியாக வந்து என்னை மருத்துவமனையில் சேர்க்க முயற்சிக்கவில்லை.
ஏற்கனவே இந்த எஸ்.ஐ. குறித்து நான் உயர் அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளேன் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications