'ரா' மீது குற்றச்சாட்டு-எந்த ஆதாரமும் தராத பாக்.
டெல்லி: இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல், பலுசிஸ்தான் தீவிரவாதம் உள்ளிட்டவற்றில் இந்தியாவின் ரா உளவு அமைப்புக்கு தொடர்பு உள்ளதை நிரூபிக்கும் ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்கள் எதையும் பாகிஸ்தான் பிரதமர் கிலானி, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளிக்கவில்லை என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
இது பாகிஸ்தான் தரப்பிலிருந்து கிளப்பி விடப்படும் அவதூறான, திசை திருப்பும் வகையிலான தவறான தகவல்கள் ஆகும் என்றும் மத்திய அரசுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எகிப்தில் நடந்த அணி சேரா நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங்கிடம், பாகிஸ்தான் பிரதமர் கிலானி, ரா அமைப்பின் தொடர்புகளை அம்பலப்படுத்தும் ஆதாரங்கள் அடங்கிய ஆவணப் பட்டியலை வழங்கியதாக பாகிஸ்தான் பத்திரிக்கையான டான் செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால் இது சுத்தப் பொய், விஷமத்தனமானது என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. பாகிஸ்தான் அரசு தரப்பிலிருந்து இதுபோல் எந்த ஆவணமும் தரப்படவில்லை என்றும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், இது முற்றிலும் கற்பனையானது. இதுபோல எந்த ஆவணமும் பாகிஸ்தான் தரப்பிலிருந்து நமக்கு வழங்கப்படவில்லை.
மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விளக்கி மட்டுமே ஒரு ஆவணத்தை பாகிஸ்தான் தந்துள்ளது.
பாகிஸ்தானில் நடந்த சம்பவங்களுக்கும், இந்தியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications