மியான்மர் ஜனநாயக தலைவி ஆங் சான் மீதான தீர்ப்பு ஆக. 11க்கு ஒத்திவைப்பு
யாங்கோன்: மியான்மர் ஜனநாயக கட்சித் தலைவி ஆங் சான் சூகியி மீதான ராணுவ கோர்ட்டின் தீர்ப்பு ஆகஸ்ட் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் முடிவில் ஆங் சானுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. தற்போது ஆங் சான் சூகியி வீட்டுக் காவலில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர், ஆங் சான் சூகியியின் வீடு உள்ள பகுதிக்கு அருகே உள்ள ஏரியில் நீந்திச் சென்று ஆங் சான் சூகியி வீட்டுக்குள் சென்று சந்தித்தார். இதையடுத்து ஆங் சான் மீது வீட்டுக் காவல் விதிமுறைகளை மீறி விட்டதாக வழக்கு தொடர்ந்தது மியான்மர் ராணுவ அரசு.
யாங்கோனில் உள்ள இன்செய்ன் சிறைச்சாலைக்குள் ஆங் சான் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்குக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
ராணுவ ஆட்சியின் இந்த கண் துடைப்பு வழக்கு உடனடியாக ரத்து செய்யப்பட்டு உடனடியாக ஆங் சான் விடுதலை செய்யப்படவேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. ஆனால் அதை மியான்மர் ராணுவ அரசு ஏற்கவில்லை.
இந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது ஆகஸ்ட் 11ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கபப்ட்டு விட்டது. வழக்கை மீண்டும் மறு பரிசீலனை செய்ய நீதிபதிகள் முடிவு செய்துள்ளதால் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம்.
ஆங் சான் சூகியி கடந்த 20 ஆண்டுகளில் 14 ஆண்டுகள் தொடர்ந்து வீட்டுக் காவலில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங் சான் தலைமையிலான ஜனநாயக தேசிய லீக் கட்சி 1990ல் நடந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது. ஆனால் அதை ஏற்காத தேர்தலை ரத்து செய்து ஆங் சானை வீட்டுக் காவலில் வைத்து விட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications