இளைஞர் படையை தட்டி எழுப்பும் ஜெயலலிதா!

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவின் 44 மாவட்டங்களிலும் வருகிற 5ம் தேதி முதல் அதிமுகவின் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் என கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபை இடைத் தேர்தல் புறக்கணிப்பால் தொய்வடைந்துள்ள அதிமுகவினர் மத்தியில் புத்தெழுச்சியை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளின் முதல் படமாக இளைஞர் பட்டாளத்தை சுறுசுறுப்பாக செயல்பட வைக்க ஜெயலலிதா முடிவெடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையிலும், வளர்ச்சிப் பணிகள் குறித்தும் விவாதிக்க 5.8.09 முதல் 28.12.09 வரை அ.தி.மு.க. இளைஞர், இளம் பெண்கள் பாசறை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடை பெறுகிறது.

வருகிற 5-ந்தேதி திருவள்ளூரிலும், 8-ந்தேதி வேலூர் மேற்கிலும் 11-ந்தேதி வேலூர் கிழக்கு மாவட்டங்களிலும், இளைஞர்-இளம் பெண்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

14, 17, 20, 24 தேதிகளில் காஞ்சீபுரம் கிழக்கு, மேற்கு, விழுப்புரம் வடக்கு, தெற்கு மாவட்டங்களிலும் 27, 30-ந் தேதிகளில் கடலூர் கிழக்கு, மேற்கு மாவட்டங்களிலும் கூட்டம் நடக்கிறது.

செப்டம்பர் 2, 5-ந்தேதி களில்- திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, மாவட்டங்கள், 9-ந்தேதி- தென் சென்னை, 14, 17, 19, 22, 24 தேதிகளில் பெரம்பலூர், திருச்சி மாநகர், திருச்சி புறநகர், கரூர், நாமக்கல் மாவட்டங்கள்.

அக்டோபர் 1, 4, 7, 10, 20, 23, 26, 29 தேதிகளில் மதுரை மாநகர், மதுரை புறநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் கூட்டம் நடக்கிறது.

நவம்பர் 1, 4, 7, 12, 15, 18, 21, 24, 27, 30 தேதிகளில்- கன்னியாகுமரி, நெல்லை மாநகர், நெல்லை புறநகர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாநகர், சேலம் புறநகர் கிழக்கு, சேலம் புறநகர் மேற்கு, ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு மாவட்டங்களில் கூட்டம் நடக்கிறது.

டிசம்பர் 3, 6, 9, 12, 16, 19, 22, 26, 28 தேதிகளில் புதுக்கோட்டை, தஞ்சை தெற்கு, தஞ்சை வடக்கு, நாகப்பட்டினம், திருவாரூர், கோவை மாநகர், கோவை புறநகர் தெற்கு, கோவை மாநகர் வடக்கு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அ.தி.மு.க. இளைஞர், இளம் பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டங்கள் நடைபெறுகிறது.

44 மாவட்டங்களில் நடை பெறும் இந்த ஆலோசனை கூட்டங்களுக்கு அ.தி.மு.க. இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்குவார். அந்தந்த மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் முன்னிலை வகிப்பார்கள். ஆலோசனை நடைபெறும் மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள், இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் மாவட்ட கழகங்கள் ஏற்பாடு செய்யவேண்டும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+