இரட்டை ஆயுளை எதிர்த்து எஸ்ஏ ராஜா சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்
நெல்லை: ஆலடி அருணா கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட எஸ்ஏ ராஜா சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்கிறார்.
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா அவரது நண்பர் ஆசிரியர் பொன்ராஜ் ஆகியோர் ஆலங்குளம் அருகே வாக்கிங் சென்றபோது கடந்த 31-12-2004 சரமாரியாக வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக கல்வி நிறுவனங்களின் அதிபர் எஸ்ஏ ராஜா உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் கூலிப்படை தலைவர்களான பென்னி, பாஸ்கர் ஆகிய 2 பேர் போலீசார் பிடித்ததும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
பிரபல கூலிப்படை கொலையாளி டாக் ரவி பிடிபடாமல் தலைமறைவாக இருந்தான். மற்ற 9 பேர் மீது நெல்லை கோர்ட்டில் விசாரணை நடந்தது. இதில் கடந்த 17-4-2008 அன்று தீர்ப்பு கூறப்பட்டது.
நெல்லை கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அழகர், பாலா ஆகியோர் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். அது போல எஸ்ஏ ராஜா உள்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அரசு தரப்பிலும் அப்பீல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் பானுமதி, மாலா ஆகியோர் விசாரணை நடத்தி நேற்று தீர்ப்பு கூறினார்கள். இதில் விடுதலை செய்யப்பட்ட எஸ்ஏ ராஜாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட வேல்துரை விடுதலை செய்யப்பட்டார்.
கீழ் கோர்ட்டில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பாலா, அழகர் ஆகியோருக்கு தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கீழ்கோர்ட்டில் விடுதலை செய்யப்பட்ட கண்ணன், அர்ச்சுணன், பரமசிவன் ஆகியோரின் விடுதலையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
தண்டனை விதிக்கப்பட்ட அனைவருக்கும் 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை கேட்டதும் எஸ்ஏ ராஜா மற்றும் அவரது மகன்கள் கதறி அழுதனர்.
இந்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து எஸ்ஏ ராஜா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாட்டை வக்கீல்கள் துரைசாமி, சரவணன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications