பணவீக்கம் மேலும் குறைந்தது!
டெல்லி: இந்தியாவில் கிட்டத்தட்ட பணவீக்கம் என்ற பொருளாதாரப் பதமே அர்த்தமிழந்து வருகிறது. அதைக் கணக்கிடுகிற முறை, முக்கியத்துவம் எதுவுமே அர்த்தமுள்ளதாகத் தெரியவில்லை.
ஒரு பக்கம் உணவு தானியப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய காய்கறிகள் - பழங்கள் போன்றவற்றின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், பணவீக்கம் என்ற விஷயமே நாட்டில் இல்லை என்று அரசு வாரம்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த வார பணவீக்க அறிக்கையின்படி, நாட்டில் மைனஸ் 1.74 சதவிகிதமாக உள்ளது பணவீக்கம்.
பணவீக்கத்துக்கு புதிது புதிதாக விளக்கம் கற்பிக்கும் பண்டிதர்களின் கருத்துப்படி, போன ஆண்டைவிட இந்த ஆண்டு விலை குறைந்திருக்கிறது என்று பொருள்.
நடைமுறை நிலவரம் என்ன என்பதை மக்கள் நன்குணர்வார்கள்.
இந்த வாரம் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள கணக்கின்படி, அனைத்து உணவு தானியப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயின் விலையும் உயர்ந்துள்ளது. பீர், மது வகைகளின் விலை 13 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஜவுளித்துறைப் பொருட்களின் விலை 9 சதவிகிதம் உயர்ந்துள்ளது. எலெக்ட்ரானிக் பொருட்களின் விலை 22 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. பால் பொருட்களின் விலை 4.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
ஆனால்-
பணவீக்கம் மட்டும் -1.74 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாம். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச பணவீக்கமாம் இது.
கடந்த ஆண்டு இதே நாளில் பணவீக்கம் 12 சதவிகிதத்தை தாண்டியிருந்தது. ஆனாரல் இப்போதுள்ளதைக் காட்டிலும் அன்றைக்கு விலைகள் குறைவாகவே இருந்தன!
சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு:
இந்தியப் பங்குச் சந்தை வியாழக்கிழமை 500 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு கண்டன. சமீப நாட்களில் சென்செக்ஸில் ஏற்பட்ட அதிகபட்ச உயர்வு இதுவாகும்.
குறிப்பாக வர்த்தகத்தின் இறுதி நேரத்தில் இன்றைய நாளின் மிக அதிகபட்ச அளவான 15,530 புள்ளிகள் வரை போனது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் 154 புள்ளிகள் உயர்ந்து 4612 புள்ளிகள் வரை போனது. சர்வதேச பொருளாதாரம் மீட்சிக்குத் திரும்பும் என்ற நம்பிக்கை மற்றும் அமெரிக்காவில் வட்டி விகிதம் மாறாது என்ற அறிவிப்பு காரணமாகவே இந்த பாஸிடிவ் போக்கு என நிபுணர்கள் தெரிவித்தனர்.
இன்றைய நாளில் நஷ்டம் சந்தித்த பங்குகள் மிகச் சில மட்டுமே. டிஎல்எப், மாருதி சுசுகி, ஐசிஐசிஐ போன்றவை நல்ல லாபத்தில் கைமாறி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications