புனேவில் மேலும் ஒரு பெண் பலி - உயிரிழப்பு 21 ஆனது

இவர்களையும் சேர்த்து இந்தியாவி்ல் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு மொத்தம் 21 பேர் இறந்துள்ளனர்.
புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில், நேற்று இரவு இக்குழந்தை இறந்தது. அக்குழந்தையின் பெயர் ஸ்வாபிமான் காம்ப்ளே. மூச்சுத் திணறல் ஏற்பட்டு சஹாயத்ரி முனோத் மருத்துவமனையில் அக்குழந்தை சேர்க்கப்பட்டிருந்தது. கடந்த ஒரு வாரமாக இக்குழந்தை மருத்துவமனையில் இருந்தது. இடையில் சசூன் மருத்துவமனைக்கு பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்காக குழந்தை கொண்டு செல்லப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை இறந்து போனது. இந்தக் குழந்தைதான் இதுவரை இறந்தவர்களியே மிகவும் வயது குறைந்ததாகும்.
மூதாட்டி பலி:
இந்த நிலையில் 75 வயதாகும் பார்தி கோயல் என்ற புனே பெண்மணி இன்று காலை பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானார். இதன் மூலம் புனேவில் மட்டும் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
பார்தி கோயல், கேஇஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.
பெண் பலி...
இதேபோல புனேவில் அர்ச்சனா கோலே என்ற 37 வயதுப் பெண் இன்று மாலை மூன்றே முக்கால் மணியளவில் உயிரிந்தார். புனேவில் உள்ள ஸ்ரீ நர்சிங் ஹோமில் அவர் அனுமதிக்கப்ட்டிருந்தார்.
மகாராஷ்டிராவில் 16 பேர் பலி
இவரையும் சேர்த்து இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
பன்றிக் காய்ச்சலுக்கு மகாராஷ்டிரா மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும் புனேவில் மட்டும் 13 பேர் இறந்துள்ளனர்.
மும்பையில் இருவரும், நாசிக்கில் தலா ஒருவரும் இறந்துள்ளனர்.
சென்னை, திருவனந்தபுரம், அகமதாபாத், வதோதரா, பெங்களூர் ஆகிய நகரங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் தேசிய அளவில் இறந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications