தமிழக அரசின் கெடுபிடியால் கேரள அரசுக்கு வருவாய் அதிகரிப்பு!
செங்கோட்டை: தமிழக அரசின் அதிரடி சோதனை கெடிபிடிகளால் கேரள அரசுக்கு வருவாய் அதிகரித்துள்ளது.
இது குறித்து கேரள மாநிலத்தின் முன்னணி நாளிதழான மலையாள மனோரமா வெளியிட்டுள்ள செய்தி:
தமிழகத்தின் வழியாக அண்டை மாநிலமான கேரள மாநிலத்திற்கு நெல்லை மாவட்டம் புளியரை, நாகர்கோவில் மாவட்டம் அமரவிளை சோதனை சாவடிகள் வழியாக மணல், குண்டுக்கல், சிமிண்ட், கல்பவுடர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. எரிசாரய கடத்தலும் நடைபெற்று வந்தது.
இதனை முற்றிலும் ஓழிக்கும் விதமாக தமிழக அரசு அதிரடியான நடவடிக்கைகளில் இறங்கி குமரி மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளும், நெல்லை மாவட்டம் செங்கோட்டை புளியரை பகுதியில் 5க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளும் அமைத்து தீவிர சோதனை மேற்கொண்டது.
இதனால் ஆரியங்காவு, அமரவிளை செக்போஸ்ட் வழியாக கடத்தப்பட்டு வந்த எரிசாராயம், பாறைபவுடர், சிப்ஸ், போன்றவைகளும், தமிழகத்தில் ரேசனில் வழங்கப்படும் 1 ரூபாய் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற கடத்தல்களுக்கு கேரள ஆளும் கட்சியில் உள்ளவர்கள் பிண்ணணியில் இருந்து வருகின்றனர். ஆரியங்காவு சோதனை சாவடியில் அதிநவீன ஸ்கேனர் கருவி வைக்கவும் அவர்கள் தடையாக இருந்து வருகின்றனர்.
கேரள அரசின் கமர்ஷியல் வரியை ஏமாற்றும் விதமாக சிமிண்ட், அரிசி, ஆடு மாடுகள் போன்றவற்றை கேரள அரசு வணிக வரி அதிகாரிகள் துணையோடு கடத்தல் செய்துள்ளனர்.
இந் நிலையில் தமிழக அரசு சோதனைச் சாவடிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அதிக பணியாளர்களை அமர்த்தி சோதனைகளை கூடுதலாக்கியதால் கேரள மாநிலத்திற்குள் ஆரியங்காவு, அமரவிளை வழியாக கடத்தல் நடைபெறுவது தடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக எல்லை சோதனை சாவடிகளில் தீவிரமாக சோதனை நடத்தி வரி முறையாக வசூல் நடப்பதால் கேரளாவிலும் அதை பின்பற்றி வரி வசூல் செய்யப்படுகிறது.
தமிழக அரசின் முறையான சோதனையால் கேரள அரசுக்கு அதிகளவு வருவாய் அதிகரித்துள்ளது என்று அந்த நாளிதழ் கூறியுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications