புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் ஜப்தி!
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அரசு திட்டத்திற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்காத மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதி மன்றம் உத்தரவிட்டது.
புதுக்கோட்டையில் அரசு திட்டத்திற்காக பொது மக்கள் சிலர் நிலம் கொடுத்தனர். ஆனால், அதற்கு இழப்பீட்டு தொகை வழங்காமல் அரசு பல நாட்களாக இழுத்தடித்து வந்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இழப்பீடு வழங்காத மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இதனையடுத்து, நீதிமன்ற அமீனாவுடன் பாதிக்கப்பட்ட மக்கள் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர்.
அங்கு அரசு அதிகாரிகளிடம் நீதிமன்ற ஜப்தி உத்தரவைக்காட்டி ஜப்தி செய்ய வந்ததை தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்பு, செப்டம்பர் 11ம் தேதிக்குள் இழப்பீட்டுத் தொகையை அளிப்பதாக உயர் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து ஜப்தி நடவடிக்கையை கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தினால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications