இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 12 இலங்கை மீனவர்கள் கைது
தூத்துக்குடி: இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 12 இலங்கை மீனவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
இந்திய கடலோர காவல்படை கப்பல் வீரா நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது தூத்துக்குடியில் இருந்து கிழக்கே சுமார் 10 கடல் மைல் தொலைவில் ஒரு படகு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றி கொண்டிருந்தது.
அந்த படகு தமிழகத்தை சேர்ந்தது போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக காணப்பட்டது. இதையடுத்து கடலோரக் காவல் படையினர் அருகில் சென்று விசாரித்தனர். இதில் அது இலங்கையை சேர்ந்த படகு என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்து அழைத்து வந்தனர். வரும் வழியில் மேலும் ஒரு படகில் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
கடலோரக் காவல்படையினர் அவர்களையும் கைது செய்தனர். இரண்டு படகுகளிலும் இருந்த 9 மீனவர்களை இன்று தெர்மல் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கின்றனர்.
ஏற்கனவே இதேபோல் அத்துமீறி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்ததாக 12 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு தெர்மல் காவல் நிலையத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications