For Daily Alerts
Just In
இலங்கை முன்னாள் சிறார் போராளிகளுக்கு மலேசியாவில் வேலை
கோலாலம்பூர்: விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சிறார் போராளிளாக இருந்த சிலருக்கு மலேசியாவில் வேலை கொடுக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு கட்டுமான வேலையில் பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் மலேசியாவில் உள்ள கட்டுமான நிறுவனங்களுக்கு வேலை பார்க்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அனுப்பி வைக்கப்பட்ட சிறார்களுக்கு 19 முதல் 21 வயது இருக்கும் என இலங்கை சமூக நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 3000 போராளிகளை மறு சீரமைக்கும் பயிற்சி நடவடிக்கைகள் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது.