'கலெக்டர்கள்..போலீஸ்: கண்கள்..காதுகள்'!
சென்னை: அரசின் லட்சியங்கள் நிறைவேற அரசுக்கும், மக்களுக்கும் இடையே கண்களாகவும், காதுகளாகவும் கலெக்டர்களும், காவல்துறை அதிகாரிகளும் செயல்பட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் இரண்டு நாள் மாநாட்டை துவக்கி வைத்து அவர் பேசுகையில்,
தமிழக கடலோரப் பகுதிகளை தீவிரமாக கண்காணித்து அகதிகள் என்ற போர்வையில் விரும்பத்தகாத சக்திகள் மாநிலத்தில் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது காவல்துறையினரின் கடமை.
சட்டம் ஒழுங்கை காப்பாற்றி மாநிலத்தின் நற்பெயரை காக்க வேண்டிய பொறுப்பும் காவல்துறைக்கு உண்டு. மாநிலத்தில் பயங்கரவாத செயல்கள் வேரூன்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது காவல்துறைன் முன்னுள்ள மகத்தான பணியாகும்.
இதேபோல அரசின் அனைத்து திட்டங்களும் முறையாக மக்களை சென்றடைகிறதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பும், கடமையும் கலெக்டர்களுக்கு உண்டு.
உணவுப் பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆண்டு 3 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு இலவச கேஸ் அடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றை வரும் அக்டோபர் மாதம் இறுதிக்குள் வழங்கும் பணிகளுக்கு கலெக்டர்கள் முன்னுரிமை வழங்க வேண்டும்.
அரசின் லட்சியங்கள் நிறைவேற அரசுக்கும், மக்களுக்கும் இடையே கண்களாகவும், காதுகளாகவும் கலெக்டர்களும், காவல்துறை அதிகாரிகளும் செயல்பட வேண்டும் என்றார் முதல்வர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications