குதிரை ஓடிய பிறகு லாயத்தை பூட்டி... வைகோ

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தின் வாழ்வாதாரங்களை அண்டை மாநிலங்கள் பறிக்கவும், இதனால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டுக்குத் தீங்கும் இடரும் ஏற்படவும், மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வழிவகுத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
முல்லைப் பெரியாறு பிரச்சனையில், தமிழகத்துக்கு ஒப்பந்தம் உரிமை பாதுகாப்பாக இருக்கும் நிலையில், அந்தப் பாதுகாப்பு அரணை உடைக்கும் நோக்கத்துடன், புதிய அணைகட்டக் கேரள அரசு தீர்மானித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை உதாசீனப்படுத்திவிட்டு, தான்தோன்றித்தனமான போக்கில் செயல்பட்டு வருகிறது.
இதனால், தென் தமிழ்நாட்டு விவசாயிகள் பாசன உரிமையை இழக்க நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இரண்டு நாள்களுக்கு முன்னர், கேரளத்தின் முன்னாள் முதல்வர் உம்மண் சாண்டி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்குத் தொழில் நுட்ப அனுமதியை மத்திய அரசு வழங்கிவிட்டது என்றும், இனி எந்தத் தடங்கலும் இல்லை என்றும் கூறி, மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
குதிரை ஓடிய பிறகு லாயத்தைப் பூட்டுவதுபோல, தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் ஒவ்வொன்றிலும் தமிழக அரசு கடமையைச் செய்யாமல், மத்திய அரசின் துரோகத்தை வேடிக்கை பார்க்கிறது.
புதிய அணை கட்டுவதற்கு, ஆய்வு நடத்துவதற்கான அனுமதியை, மத்திய அரசு வழங்கியுள்ள உண்மையைக்கூட மூடி மறைக்கத் தமிழக முதல்வர் முற்படுவது மிகவும் கண்டனத்துக்குரியது.
தமிழக விவசாயிகளுக்கும், தமிழ்நாட்டுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மத்திய அரசு துரோகம் இழைப்பதைக் கண்டித்தும், தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து, தாக்குதல்கள் நடத்துவதைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செப்டம்பர் 30ம் நாள், காலை 11 மணி அளவில், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில், மறுமலர்ச்சி திமுக சார்பில், என் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications