மெக்சிகோவில் 6.4 ரிக்டர் நிலநடுக்கம்-சுனாமி அபாயம் இல்லை
Subscribe to Oneindia Tamil
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நாட்டு கடல் பகுதியில் சுமார் 6.4 அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினம் மதியம் சுமார் 12.46 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோவின் மேற்கு சுற்றுலா பகுதியான பியூர்டோ வாலர்டா பகுதியில் இருந்து சுமார் 170 கிமீ தென் மேற்கே கடலுக்கு அடியில் சுமார் 4 கிமீ ஆழத்தில் மையம் கொண்டது.
இதனால் சுனாமி அபாய எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications