தேர்தல்: நவாஸ் ஷெரீபுக்கு செளதி தடை!
இஸ்லாமாபாத்: நடக்கவிருக்கும் பாகிஸ்தான் பஞ்சாப் மாநில தேர்தலில் அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் போட்டியிடமாட்டார் என்று தெரிகிறது. செளதி அரசரின் உத்தரவையடுத்து அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக பாகிஸ்தான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் டெய்லி டைம்ஸ் வெளியி்ட்டுள்ள செய்தியில்,
கடந்த 2000ம் ஆண்டு முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ராபுக்கும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு இடையே செளதி அரசர் அப்துல்லா கொடுத்த உத்தரவாதத்தின் அடிப்படையில் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதில் வரும் 2010ம் ஆண்டு வரை நவாஸ் தேர்தலில் போட்டியிட கூடாது என கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் காரணமாக தான் நாடு திரும்பிய பின்னரும் நவாஸ் ஷெரீப் இதுவரை தேர்தலில் போட்டியிடாமல் இருந்துள்ளார்.
இதனால் விரைவில் நடக்கவிருக்கம் பஞ்சாப் மாகாண தேர்தலிலும் அவர் போட்டியிட மாட்டார்.
மேலும் சமீபத்தில் நவாஸ் ஷெரீப், சவுதி அரசரை சந்தித்தபோது எனது நட்பு உங்களுக்கு வேண்டுமென்றால் முஷராபுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும் என்று கூறிவிட்டார் அரசர். இதையடுத்து தேர்தலில் போட்டியிடு்ம் முடிவை நவாஸ் வாபஸ் பெற்றுவிட்டார்.
ஆனால், இது குறித்து நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் செய்தித் தொடப்பாளர் அக்ஷன் இக்பால் கூறுகையில்,
செளதி அரசர் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை. அரசியலில் போட்டியிடுவது என்பது அரசியலமைப்பு உரிமை. இதை யாரும் தடுக்க முடியாது. நவாஸ் ஷெரீப்பும், முஷராபும் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை.
எங்கள் கட்சி மற்றும் தலைவர் நவாஸ் ஷெரீப்பின் புகழை கெடுக்கும் நோக்கில் பரப்பப்படும் அவதூறு பிரச்சாரம் இது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications