நவீன உலகின் 3 'தொழில்நுட்ப தந்தைகளுக்கு' நோபல்!

அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்மித் (79), சீனாவைச் சேர்ந்த சார்லஸ் காவ் (75), கனடாவைச் சேர்ந்த வில்லார்ட் பாய்லே (85) மூவருக்கும் இந்க விருதைப் பெறுகின்றனர்.
இதில் சார்லஸ் காவ், 1966ம் ஆண்டு ஆப்டிகல் பைபர் மூலம் ஒளியை நெடுந்தொலைவுக்கு பயணம் செய்ய வைத்து சாதனை நிகழ்த்தியவர். இந்தத் தொழில்நுட்பம் தான் இன்று வினாடிகளில் நமது டேட்டாவை உலகி்ன் எந்த மூலைக்கும் அனுப்பவும், பெறவும் உதவும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தின் அடிப்படையாகும். இன்டர்நெட்டுக்கும் இந்த தொழில்நுட்பமே அடிப்படை.
இவர் இங்கிலாந்தின் ஸ்டாண்டர்ட் டெலிகம்யூனிகேசன்ஸ் லேபாரட்டியில் பணியாற்றியபோது இந்த தொழில்நுப்டத்தை உருவாக்கினார்.
1969ம் ஆண்டு வில்லார்ட் பாய்லே, ஜார்ஜ் ஸ்மித் இருவரும் இமேஜிங் செமிகண்டக்டர் சர்க்கியூட்டை வடிவமைத்தனர். நியூஜெர்ஸியில் உள்ள பெல் ஆய்வுக் கூடத்தில் இவர்கள் இதை உருவாக்கினர். இது தான் டிஜிட்டல் கேமராக்களின் பிறப்புக்கு காரணமாக அமைந்த கண்டுபிடிப்பாகும்.
இன்று நம் செல்போன்கள், கம்யூட்டர்களில் உள்ள கேமராக்கள், சிசிடிவி கேமராக்கள் ஆகியவற்றுக்கும், மேலும் என்டோஸ்கோபி உள்பட உடலில் கேமராக்களை செலுத்தி அறுவை சிகிச்சை செய்யும் முறைக்கும் இந்தத் தொழில்நுப்டமே அடிப்படையாகும்.
மனித சமுதாயத்தையே தற்போது ஒரு குடைக்குள் கொண்டுவந்துள்ள நவீன தொலைதொடர்பு இணைப்புக்கு முதுகெலும்பாய் அமைந்த இவர்களின் கண்டுபிடிப்புகளை பாராட்டி மூவருக்கும் இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications