ஒசாமாவின் இருப்பிடம் குறித்து அமெரிக்காவுக்குத் தெரிந்திருக்கலாம் - பாக்.

வாஷிங்டன் வந்துள்ள அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆப்கானிஸ்தானில், போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் படையினர் அதி நவீன சாதனங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் ஆயுதங்களுடன் முகாமிட்டு போரிட்டு வருகின்றனர். எனவே அவர்களுக்கு நிச்சயம் பின் லேடனின் இருப்பிடம் தெரிந்திருக்கலாம்.
ஒசாமா பின் லேடன் எங்கு பதுங்கியிருக்கிறார் என்பது அமெரிக்காவுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது என்றார் குரேஷி.
ஒசாமாவும், பிற அல் கொய்தா, தலிபான் தலைவர்களும் பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத பழங்குடியினர் பகுதியில் (ஆப்கானிஸ்தன் எல்லைப் பகுதியில் உள்ளவை) பதுங்கியிருப்பதாக அமெரிக்கா உறுதியாக நம்புகிறது.
இதுகுறித்து சில தினங்களுக்கு முன்பு பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடேன் கூறுகையில், ஆப்கன் எல்லைப் பகுதியில், பாகிஸ்தானின் மேற்கு மலைப் பகுதியில்தான் தீவிரவாதம் பதுங்கியுள்ளது. அங்குதான் அல் கொய்தா உயிர் வாழ்ந்து கொகண்டிருக்கிறது. அங்குதான் பின் லேடனும் இருக்கிறார். அங்குதான் தலிபானின் மிக மோசமான தலைமையும் இருக்கிறது.
புஷ் நிர்வாகத்தின்போது, ஆப்கன் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அல் கொய்தாவினர் புதுப் பொலிவு பெற்றுள்ளனர். இது பெரும் கவலை அளிக்கும் விஷயமாகும் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
அதேபோல அமெரிக்க தூதரக அதிகாரியான ஜெரால்ட் பியர்ஸ்டீன் சில நாட்களுக்கு முன்பு கூறுகையில், பின் லேடன் உயிருடன்தான் உள்ளார். அவர் பாகிஸ்தானில் அடைக்கலம் புகுந்துள்ளார் என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், பின் லேடன் பாகிஸ்தானில்தான் இருக்கிறார். தலிபான்களின் கட்டளை அமைப்பு குவெட்டாவில் உள்ளது. அங்குள்ள புறநகர்ப் பகுதயிலிருந்து அவர்கள் தாக்குதல் நடவடிக்கைளை உத்தரவிடுகின்றனர் என்றார் பியர்ஸ்டீன்.
ஆனால் இதை பாகிஸ்தான் மறுத்திருந்தது. இந்த நிலையில்தான் அமெரிக்காவுக்கு பின் லேடன் இருப்பிடம் தெரிந்திருக்கலாம் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
பெரும் தாக்குதலுக்குத் தயாராகும் பாக்.
இதற்கிடையே தலிபான்களுக்கு எதிராக பெரும் தாக்குதலைத் தொடுக்க பாகிஸ்தான் ராணுவம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் இந்த தாக்குதலைத் தொடுக்க அது திட்டமிட்டுள்ளது. இப்பகுதியில்தான் பின் லேடன் மறைந்திருப்பதாக நம்பப்பட்டு வருகிறது.
கடந்த பல மாதங்களாகவே தலிபான்களுடன் பாகிஸ்தான் ராணுவம் போரிட்டு வருகிறது. கிட்டத்தட்ட 29 ஆயிரம் வீரர்களை பாகிஸ்தான் இதில் ஈடுபடுத்தி வருகிறது. மேலும், தீவிரவாதிகளின் இலக்குகள் மீது விமானப்படை தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தாக்குதலைத் தொடுக்க பாகிஸ்தான் ராணுவம் தயாராகி விட்டதாம். இதற்கு வசதியாக தீவிரவாதிகளின் முக்கிய நிலைகள் மீதான அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதலும் அதிகரித்துள்ளது.
ஹக்கீமுல்லா மசூத்தின் தலைமையில் இயங்கி வரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலிபான் தீவிரவாதிகளை முழுமையாக அழிக்கும் வகையில் இந்தத் தாக்குதல் இருக்குமாம்.
பாகிஸ்தானின் இந்த திடீர் முடிவுக்கு அமெரிக்காவிலிருந்து தொடர்ந்து வந்த கடும் நெருக்குதலே காரணம். தலிபான்களுக்கு எதிராக சிறு சிறு தாக்குதல் நடத்தினால் சரியாக இருக்காது. கடுமையான தாக்குதலைத் தொடுக்க வேண்டும் என அமெரிக்கா பாகிஸ்தானை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்து.
பாகிஸ்தானின் தற்போதைய திட்டம் குறித்து பென்டகன் அதிகாரிகள் கூறுகையில், பாகிஸ்தான் படையினரின் திட்டமிடல் முடிந்து விட்டது. விரைவில் பெருமளவிலான படையினர் நடவடிக்கையில் இறங்கவுள்ளனர். அதை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றனர்.
-
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications