டிசம்பரில் சூப்பர் சானிக் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை
டெல்லி: 290 கிலோமீட்டர் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடிய பிரம்மோஸ் சூப்பர் சானிக் ஏவுகணையை டிசம்பர் மாதம் இந்தியா ஏவு பரிசோதிக்கவுள்ளது.
கடலுக்கடியில் இந்த சோதனை நடத்தப்படும். இந்திய - ரஷ்ய கூட்டுத் தயாரிப்புதான் இந்த பிரம்மோஸ் ஏவுகணை. இந்தியாவின் பிரம்மபுத்திரா மற்றும் ரஷ்யாவின் மாஸ்கோ ஆகிய இரு பெயர்களை இணைத்து உருவாக்கப்பட்டதே பிரம்மோஸ் என்பதாகும்.
நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து இந்த ஏவுகணையை ஏவிப் பரிசோதிக்க பாதுகாப்புத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். டிசம்பர் மத்தியில் இந்த சோதனை நடைபெறும் எனத் தெரிகிறது.
பிரம்மோஸ் ஏவுகணைகளில் அணு ஆயுதங்களையும் பொருத்தி ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மோஸ் ஏவுகணையின் வெற்றிகரமான சோதனை இந்தியாவின் பலத்துக்கு மேலும் வலு சேர்க்கும் என பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியா சமீப காலமாக நீர் வழி படை பலத்தை பெருக்கி வருகிறது. அணுசக்தியில் இயங்கக் கூடிய ஐஎன்எஸ் அரிஹாந்த் என்ற நீர்மூழ்கிக் கப்பலை சமீபத்தில் வடிவமைத்து, கடற்படையின் பலத்தை பெருக்கியது. முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைத்து கட்டப்பட்ட போர் நீர்மூழ்கிக் கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில், 700 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடிய அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய கே-15 செளர்யா ஏவுகணை ஏவி பரிசோதிக்கப்பட்டது. இதுதவிர அடுத்த ஆண்டுக்குள் ரஷ்யாவிடமிருந்து அகுலா 2 ரக அணு நீர்மூழ்கிக் கப்பலை வாங்கவும் இந்தியக் கடற்படை மும்முரமாக உள்ளது.
இந்த வரிசையில் தற்போது பிரம்மோஸும் இணைகிறது. ஒரிசா மாநிலம் பாலசோர் பகுதியில், இந்த சோதனை நடைபெறும்.
பிரம்மோஸ் ஏவுகணை ஏற்கனவே ராணுவம் மற்றும் கடற்படையில் சேர்க்கப்பட்டு விட்டது. தற்போது இதை விமானப்படையிலும் சேர்ப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சுகோய் ரக போர் விமானங்கள் மூலம் பிரம்மோஸை ஏவும் பணிகளில் விமானப்படை மும்முரமாக உள்ளது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications