கோவை குண்டு வெடிப்பு கைதிகள் இருவர் விடுதலை
கோவை: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இருவர் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விடுதலை செய்யப்பட்டனர்.
கோவையில் கடந்த 1998ம் வருடம் பிப்ரவரி மாதம் 14ம் தேதி அன்று தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.
இந்த வெடு குண்டு சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அல்-உம்மா பாஷா, அன்சாரி உட்பட 167 பேரை கைது செய்தனர்.
வழக்கு விசாரணைக்குப் பின்பு, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி உட்பட எட்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
தனி நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதி மன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், 18 வயதுக்கு கீழ் இருந்த எங்களை போலீசார் கைது செய்து, குண்டு வெடிப்பு வழக்கில் சேர்த்து விட்டனர். எனவே, தனி நீதி மன்றம் விதித்த தண்டனையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என, ஆயுள் தண்டனை பெற்ற ஆத்துப்பாலத்தைச் சேர்ந்த முஜிபுர் ரகுமான், மேலப்பாளையத்தைச் சேர்ந்த அம்ஜத் அலி ஆகியோர் சென்னை ஹைகோர்ட்டில் முறையீடு செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த வாரம் இருவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற உத்தரவு நேற்று, கோவை மத்திய சிறைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து 11 ஆண்டுக்கு பின்பு , அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications