பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தலையீடாதீர்கள்- சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை
டெல்லி: இந்திய - சீன உறவின் நீடிப்பை கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ள சீனா முன்வர வேண்டும் என இந்தியா எச்சரிக்கை கலந்த தொணியில் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியில், பாகிஸ்தான் அரசுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளப் போவதாக சீனா கூறியுள்ளது. இதுதொடர்பான செய்தி, சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஜின்ஹுவாவில் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாகிஸ்தான் அரசுடன் இணைந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த சீனா விரும்புவதாக அந்த நாட்டு அதிபர் ஹூ ஜின்டாவோ தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 1947ம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது பாகிஸ்தான். இது சீனாவுக்கு நன்கு தெரியும். இந்தியாவின் நிலை குறித்தும் அது அறியும். இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியில் அது தலையிடுவது கவலை தருகிறது.
இந்தியா - சீனா உறவு நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு இதுபோன்ற செயல்களில் சீனா ஈடுபடக் கூடாது என்று இந்தியா விரும்புகிறது என்று தெரிவித்துள்ளார்.
நேற்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானியும், சீன அதிபரும் சந்தித்துப் பேசினர். அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள காரகோரம் நெடுஞ்சாலையை சீரமைக்குப் பணியில் பாகிஸ்தானுடன் இணைந்து சீனா செயல்படப் போவதாக ஹூ ஜின்டாவோ தெரிவித்தார்.
மேலும், சீனா மற்றும் பாகிஸ்தான் மக்கள் எப்போதும் இதயப்பூர்வமாக இணைந்திருப்பவர்கள் என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications